அண்: தம்பி எப்படி இருக்க? சவுக்கியமா?
தம்பி: கடவுள் hகிருபைல நல்லா இருக்கேண்ணே, ஆனா ரெண்டு நாளா ஒரே தலைவலி. உயிர எடுக்குதுண்ணே. இந்த தலைவலிக்காக கொஞ்சம் பிரே பண்ணிக்கோங்கண்ணே.
அண்: நா ஒரு கேள்வி கேட்கட்டுமா, கோபிச்சுக்க்கமாட்டியே? நீ ஒரு வளர்ந்த கிறிஸ்தவன்தானே?
தம்பி: அதுல என்னணே சந்தேகம், ஏண்ணே இப்படி ஒரு கேள்விய கேட்குறீங்க?
அண்: தலைவலிக்கு பிரே பண்ண சொன்னியே அதான் கேட்டேன். நீ மட்டுமல்ல நிறையப்பேர் இப்படிதான் காச்சலுக்கும் தலைவலிக்கும் பிரே பன்றாங்க. இதுக்கு ஒரு லிமிட்டே இல்லாம போகுது
தம்பி: ஏண்ணே, மத் 21:22 ல, நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளை யெல்லாம் பெறுவீர்களென்று இயேசுவே சொல்லியிருக்கிறார்ல. அதுனால ஜெபிக்கிறது தப்பில்லயே.
அண்: ஜெபிக்கிறதும் தப்பு இல்ல, நம் இயேசுவால நிச்சயமா சுகம் கொடுக்கவும் முடியும். அதுல சந்தேகமேயில்லை. பவுல் இப்படித்தான் ஒரு முறை, தனக்குள்ள முள் நீங்கும்படி ஒரு தரம் அல்ல, மூன்று தரம் கர்த்தரிடத்தில் பிரே பண்ணினார். என்ன ஆச்சு? “என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலன் பூரணமாய் விளங்கும்” என்று கர்த்தர் சொல்லிவிட்டாரே.
தம்பி: அது வந்து… பவுலையும் நம்மளையும் கம்ப்பர் பண்ணாதீங்கண்ணே. அவர் பெரிய விசுவாசிண்ணே.
அண்: போச்சுடா. ஆரம்பிச்சுட்டியா. அப்படில்லாம் இல்லப்பா, விசுவாசத்தில வளர வளர நாம் இந்த உடலுக்காக ஜெபிக்கிறதுக்குப் பதிலா நம் உள்ளத்துக்காக அதிகமா ஜெபிக்கனும். அதைத்தான் கர்த்தரும் எதிர்பார்க்கிறார்.
தம்பி: அண்ணே, நீங்க சொல்றது என்னமோ சரிதான். உள்ளமும் முக்கியம் ஆனா உடலும் முக்கியமில்லயா?
அண்: உனக்கு வேணும்னா ரெண்டும் முக்கியமா இருக்கலாம். ஆனா கர்த்தருக்கு உடலைக்காட்டிலும் நம் உள்ளம்தான் முக்கியம். மத்தேயு 5: 29 ல இயேசு என்ன சொல்லியிருக்கிறாரு தெரியுமா? “உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால் அதைப் பிடுங்கி எறிந்து போடு, உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத்தறித்து எறிந்துபோடு, உன் சரீரம் முழுவது நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும் உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்” னு சொல்லியிருக்கும் போது உடலைக்காட்டிலும் உள்ளத்துக்கு எவ்வளவு முக்கித்துவம் கொடுக்கிறார்னு புரியுதா?
தம்பி: நல்லா புரியுதுண்ணே. இயேசுவை எப்போதுமே சுகம் கொடுக்கிறவராவே நா நினைத்ததால நம்மை ரட்சிக்க வந்ததையும் நாம் பெற்ற ரட்சிப்பைக் காத்துக்க அவர் ஜெபிக்கக் கற்றுக்கொடுத்ததையும் மறந்துட்டேன்
அண்: கேட்கிறதுக்கு ரொம்ப சந்தோஶமா இருக்கு. இப்போ தலைவலி எப்படி இருக்கு தம்பி
தம்பி: பரலோகத்தை நினைக்கும் போது, இந்த தலைவலி எல்லாம் நத்திங் அண்ணே. என் ஆத்துமாவைக் காத்துகொள்ள பெலனுக்காக ஜெபம் பண்ணுங்க அண்ணே, அது போதும்.
அண்: கட்டாயமா இந்த காரியத்துக்காக ஜெபிப்பேன் தம்பி.
தம்பி: சரி அண்ணே, உங்கள சந்திச்சதுல எனக்கும் ரொம்ப சந்தோஶம். கடவுள் சித்தமானா பிறகு சந்திக்கலாம்.
இந்தக் கதையில் தவறிருந்தால் நான் திருத்திக்கொள்கிறேன். இல்லையேல், கதையின்படி நாம் திருந்திக்கொள்வோம்.