We have a Tamil Class for kids and adults on every Tuesday and Thursday at 7:30 via Zoom Online.
நீதிமொழிகள் 22:6 பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
செம்மொழியாகிய நம் தாய்மொழி தமிழையும், நம் குருதியில் உறுதியாய் ஒன்றிய தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், மற்றும் நமது அடையாளங்களையும் நம் சந்ததியினருக்கு பயிற்றுவிப்பதுதான் இந்த தமிழ் வகுப்பின் நோக்கம்.
தமிழ் பண்பாடும் கிறிஸ்தவ போதனைகளும் பிரித்துப் பார்க்க முடியாத, அல்லது பிரித்து பார்க்கக்கூடாத, நம்முடைய வாழ்வினை நெறிமுறைப்படுத்துகிற இரண்டு முக்கியமான விஷயங்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அதனை, Chicago Tamil Church என்ற ஒரே கூடாரத்தின் கீழ் நம் பிள்ளைகள் பெற்றுக்கொள்வது நமது ஆலயத்தின் மற்றொரு சிறப்பு!
“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது முதுமொழி. “திரைகடல் ஓடியும் திரவியம் கொடு” என்பது எங்களின் புதுமொழி! ஆம், திரைகடல் ஓடி வந்துள்ள நாம், நம்மிடம் உள்ள திரவியமாம் நம் தாய்மொழி தமிழை, அடுத்த தலைமுறைக்கு மட்டுமல்ல, தலைமுறைகள் தாண்டி நிலைக்கச்செய்ய நம்மால் முடிந்த ஏதாவதொன்றை செய்ய வேண்டும் என்ற அவா தான் இந்த முயற்சி!