வேகமாக வேதாகமம்

அண்: ஹலோ தம்பி! அது என்னப்பா எப்பப் பார்த்தாலும் பைபுளும் கையுமா அலையுறே பரவால்லயே பைபுள் வாசிக்க அவ்வளவு பிரியமா? நல்ல பழக்கம், வெரிகுட், கீப் இட் அப்.


தம்பி: அதுவாண்ணே, ஆறே மாசத்தில் முழு பைபுளையும் வாசிப்பது எப்படின்னு ஒரு புக்குல படிச்சேன். அதான் எப்படியாவது ஆறே மாசத்துல பைபுள் முழுவதையும் வாசிச்சு முடிக்கணும்னு ச்சலஞ்சா எடுத்து இரவு பகலா வாசித்துக்கொண்டிருக்கிறேன்.


அண்: ஏன் தம்பி இப்படி பைபுள் முழுவதையும் குயிக்கா வாசிக்கணும்னு நினைக்கிற?


தம்பி: ஏண்ணே, பைபுளை குயிக்கா வாசிச்சு முடிச்சா நல்லதுதானேண்ணே. சங்கீதம் ௧:௨ ல “… இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஶன் பாக்கியவான்”னு சொல்லியிருக்-குல்லண்ணே. இப்படில்லாம் வசனம் இருக்குதுன்னு இப்ப வாசிக்க ஆரம்பிச்ச அப்புறம்தான் எனக்கே தெரிஞ்சுதுண்ணே.


அண்: அந்த வசனத்துல “வேதத்தில் தியானமாயிருக்கிறவன்”னு சொல்லியிருக்கே தவிர “வாசிக்கிறவன்”னு போடல. தியானிப்பதற்கும் வாசிப்பதற்கும் வித்தியாசமிருக்கு. வேகமா வாசிக்கணுமேன்னு வாசிச்சா இப்படிதான் உண்மையான அர்த்தத்தத்தை புரிஞ்சுக்க தவறிவிடுவோம்.


தம்பி: ஆனா இப்படி இருந்தாதானண்ணே பைபுளை முழுவதும் வாசிக்-கணும்னு ஒரு மோட்டிவேஶன் வருது.


அண்: வேதத்தில் ஆழமான சத்தியங்கள் அடங்கியிருக்குது தெரியுமா? அதனாலதான் தாவீது சங்கீதம் ௧௧௯:௧௮ ல் “உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்” என்று கர்த்தரிடத்தில் கேட்கிறார்.” இந்த வேத அதிசங்களெல்லாம் வேகமா வாசிச்சா புரியமுடியாதே.


தம்பி: ஆனா இப்படி வாசிச்சா பைபுள் முழுவதையும் குயிக்கா தெரிஞ்சிக்-குவேலண்ணே


அண்: பைபுளை நிறையா தெரிஞ்சுக்குறதைக்காட்டிலும் கொஞ்சமா தெரிஞ்-சாலும், அதன் மூலமா கத்துக்கிற ஒவ்வொரு காரியத்தையும் நாம் வாழ்க்கையில கடைப்பிடிக்கணும். யாக் ௧:௨௨ ல “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயிருமிருங்கள்”னு சொல்லியிருக்குல்ல.


தம்பி: எல்லாத்தையும் மொத்தமா வாசிச்சிட்டு அப்புறம் பைபுள் சொல்றதுபடி வாழ டிரை பண்ணலாமுன்னு நினைச்சேண்ணே. ஆனா வாசிக்கிற வசனத்தை ஒழுங்கா தியானிச்சு அதிலுள்ள அதிசயங்களைப் புரிந்துகொள்வதும் அதன்படி நடப்பதுதான் முக்கியம்னு இப்பதான் புரிஞ்சதுண்ணே.


அண்: ரொம்ப சந்தோஶம் தம்பி, கர்த்தருக்குச் சித்தமானா பிறகு சந்திக்கலாம்.


இந்தக் கதையில் தவறிருந்தால் நான் திருத்திக்கொள்கிறேன். இல்லையேல், கதையின்படி நாம் திருந்திக்கொள்வோம்.

 

Book your tickets