அண்: என்ன தம்பி எப்படியிருக்கே? நீயும் ஷாப்பிங் வந்திருக்கியே, வீட்ல என்ன… விசேஷமா?
தம்பி: விசேஷமெல்லாம் ஒண்ணும் இல்லண்ணே… என்னோட பிரண்ட்ஸ், அப்புறம் என்னோட வொர்க் பண்ணுற கொலீக்ஸ் எல்லோரையும் வீட்டுக்கு டின்னருக்கு அழைச்சிருக்கேன். அதான் சாப்பாடு செய்ய காய் கறி எல்லாம் வாங்க வந்தேண்ணே.
அண்: ஓ அப்படியா… ஏம்பா இப்படி தடார் புடார்னு விருந்து பண்ணி கஷ்டப்படுத்திக்கிற?
தம்பி: இதுல என்னண்ணே கஷ்டமிருக்கு? நானும் பலமுறை இவுங்க வீட்டுக்கு விருந்துக்குப் போயிருக்கேன்ல. நான் மட்டும் மூக்கு முட்ட சாப்பிட்டுட்டு அவுங்களுக்கு விருந்து வைக்காம இருந்தா, அது சரியில்லையே.
அண்: இப்படி பதிலுக்கு பதில் விருந்து கொடுக்கிறவுங்களைக்குறித்து இயேசு என்ன சொல்றார் தெரியுமா? லூக்கா 14:12ல்ல, தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: “நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும் போது, உன் சினேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்போது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும்”ன்னு சொல்லியிருக்கிறார்.
தம்பி: என்னண்ணே… தெரிஞ்சவுங்க, முக்கியமானவங்களைதானே விருந்துக்குக் கூப்பிடமுடியும்.
அண்: ஆனா, இயேசு அப்படி சொல்லலியே. லூக்கா 14:13ல்ல “நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக” ன்னு சொல்றாரே.
தம்பி: அண்ணே இப்படி தெரியாதவங்களை கூப்பிடுறதுல என்னண்ணே பிரயோஜனமிருக்கு?
அண்: சரியா சொன்ன தம்பி. லூக்கா 14:14ல்ல “அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்கு பதில் செய்ய மாட்டார்கள்”ன்னு தான் இயேசுவும் சொல்றார்.
தம்பி: அப்புறம், ஏண்ணே வேஸ்ட்டா நான் அவுங்களுக்கு போய் விருந்து வைக்கணும்
அண்: இங்கதான் நீ தப்பா நினைக்கிற. நீ முன் பின் தெரியாத இப்படிபட்டவுங்களுக்கு விருந்துபண்ணுனீன்னா “நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் கிடைக்கும்னு” பரலோக பலனைக்குறித்து லுக்கா 14:14ல்ல இயேசு சொல்றார்ல தம்பி.
தம்பி: ஓ… இயேசு எப்படிப்பட்ட விருந்தில் பிரியமாயிருக்கிறாருன்னு இப்பதான் புரிஞ்சுதுண்ணே. சீக்கிரமா திரும்பவும் ஒரு விருந்துக்கு ஏற்பாடு பண்ணி, கஷ்டப்படுற, கை கால் ஊனமுற்ற, முன் பின் தெரியாத ஏழை ஜனங்களுக்கு விருந்து கொடுக்கப்போறேண்ணே.
அண்: கேட்கும் போது ரொம்ப சந்தோஶமாயிருக்கு தம்பி, கடவுள் சித்தமானா பிறகு சந்திக்கலாம்.
இந்தக் கதையில் தவறிருந்தால் நான் திருத்திக்கொள்கிறேன். இல்லையேல், கதையின்படி நாம் திருந்திக்கொள்வோம்.