அண்: என்ன தம்பி எப்படி இருக்க? சவுக்கியமா?
தம்பி: நா நல்லா இருக்கேண்ணே. அண்ணே எனக்கு ஒரு டவுட். என் பிரண்டு ஒருத்தன் சொன்னான், தேவன் நம்மள நல்லது செய்யவும் அனுமதிப்பார் கெட்டது செய்யவும் அனுமதிப்பாருன்னாண்ணே. தேவன் ஒருபோதும் நம்மள கெட்டது செய்ய அனுமதிக்க மாட்டாருல்லண்ணே.
அண்: அது… நம்ம தேவனோடு எப்படி ரிலேஷன்ஷிப் வைத்திருக்கோம்கிறதப் பொறுத்து இருக்குப்பா.
தம்பி: என்னண்ணே, நீங்களுமா என் பிரண்டு சொல்றது சரிங்கிறீங்க?
அண்: தேவன் தனக்கு பிரியமா நடந்துக்காத ஜனங்களை “இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்”ன்னு ரோமர் 1:26ல சொல்லியிருக்குல்ல தம்பி?
தம்பி: ஏண்ணே, சாத்தான் தானே நம்மள கெட்ட காரியங்கள செய்ய வைப்பான். தேவன் கெட்டது செய்ய அனுமதிப்பாருன்னா அவர நல்லவருன்னு சொல்ல முடியாதுல்லண்ணே.
அண்: அப்படி இல்லப்பா. IIநாளாகமம் 15:2ல “…நீங்கள் கர்த்தரோடிருந்தால் அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.”ன்னு சொல்லியிருக்கும்போது.” தேவன் கெட்ட காரியங்கள செய்ய நம்மள தூண்டுகிறவர் அல்லவே அல்ல. ஆனா அதே நேரத்துல, நாம அவர தேடாம அவருக்கு பிடிக்காத காரியங்களை செய்ய நினைக்கும்போது நம்ம இஷ்டப்படி கெட்டதைச் செய்ய நம்ம போற போக்குல விட்டுடுறாரு. அதுதான் அதின் அர்த்தம்.
தம்பி: வழக்கம்போல கன்பியூஷனா இருக்குண்ணே, கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்கண்ணே.
அண்: தம்பி…. நாம எப்படி இருக்க ஆசைப்படுறோமோ அப்படியே இருக்க தேவன் அனுமதிச்சுடராரு. ரோமர் 1:8ல “தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்”ன்னு சொல்லியிருக்கும்போது தேவனைப் பற்றிக்கொண்டிருக்க மனதில்லாம கேடான சிந்தனையோடு இருக்கிறவுங்கள அப்படியே இருக்கும்படி தேவன் விட்டுடுறாரு. நாமும் அவுங்களப்போல இருந்தோம்னா நமக்கும் அதே கதிதான்.
தம்பி: இப்போ நல்லா புரிஞ்சுதுண்ணே, தகாத சிந்தனை இல்லாம தேவனுக்கு பிரியமா எப்போதும் நடந்துக்குவேண்ணே.
அண்: ரொம்ப சந்தோஷம் தம்பி, அப்புறம் பார்க்கலாம்.
தம்பி: சரிண்ணே அப்புறம் பார்க்கலாம்.
இந்தக் கதையில் தவறிருந்தால் நான் திருத்திக்கொள்கிறேன். இல்லையேல், கதையின்படி நாம் திருந்திக்கொள்வோம்.