தேவனுக்கு பிரியமான ஜெபம்

தம்பி: என்னண்ணே எப்படி இருக்கீங்க?


அண்: நா நல்லா இருக்கம்பா. என்னப்பா தம்பி கண்ணெல்லாம் செவந்துபோயிருக்கே சரியா தூங்கலியாப்பா?


தம்பி: அதுவாண்ணே, நேத்து இரவு முழுவதும் ஜெபித்தேன். என்னுடைய பல காரியங்களுக்காக ஜெபித்ததால நேரம் போனதே தெரியலண்ணே


அண்: ரொம்ப சந்தோஷம் தம்பி. தேவனுக்கு பிரியமான காரியங்களுக்காகத்தானே ஜெபித்திருப்பே…, இல்லையா தம்பி?


தம்பி: எப்படி ஜெபித்தால் என்ன, எல்லா ஜெபமும் தேவனுக்கு பிரியமானது தானே? “நீங்கள் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்”ன்னு இயேசு மத்தேயு 21:22ல சொல்லியிருக்கிறாரே.


அண்: ஜெபத்தை தேவன் கேட்கிறவர்தான், ஆனா அவருடைய சித்தப்படி ஜெபிக்கிற ஜெபத்துலதான் அவர் பிரியமாயிருப்பாருன்னு சொல்ல வாரேன். மாற்கு 14:36ல இந்தப்பாத்திரம் நீங்ககூடுமானால் நீங்கட்டும். ஆகிலும் என் சித்தத்தின்படி அல்ல உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது”, என்று இயேசு தன்னுடைய சிலுவை பாடுகள் கஷ்டமாயிருந்தாலும் பிதாவை பிரியப்படுத்துகிற ஜெபத்தை ஏறெடுத்தாரே.


தம்பி: இயேசு ஜெபிக்கவேண்டியதுதான் ஆனா… நம்மளுடைய ஜெபம் அந்த அளவு இருக்கமுடியாதுல்லண்ணே.


அண்: I இராஜாக்கள் 3:5-10ல தேவன் சாலொமோனுக்கு சொப்பனத்தில வந்து, “நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்” என்றார். ஆனால் சாலொமோனோ தன்னை பிரியப்படுத்த ஒண்ணும் கேட்காமல், இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரிக்க ஞானத்தைக் கேட்டான். இந்தக்காரியத்தைக்கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது”ன்னு பைபுள்ள சொல்லியிருக்கும் போது எதை வேண்டுமானாலும் கேள் என்று தேவன் சொன்னாலும் அவருடைய சித்தப்படி அவருக்குப் பிரியமானதைக் கேட்கிற ஜெபத்தைத்தான் அவர் எதிர்பார்க்கிறார் பிரியமாயும் இருக்கிறார்.


தம்பி: ஜெபத்துல எதைக்கேட்டாலும் அது தேவனுக்கு பிரியமாயிருக்கும்னு இவ்வளவு நாளா நெனச்சுக்கிட்டு இருந்தேண்ணே. ஆனா அவருடைய சித்தப்படி ஜெபிச்சாதான் அவருக்குப் பிரியமாயிருக்கும்னு இப்பதான் புரிஞ்சுதுண்ணே.


அண்: ரொம்ப சந்தோஷம் தம்பி. கடவுளுக்கு சித்தமானா அப்புறம் பார்க்கலாம்.


தம்பி: சரிண்ணே அப்புறம் பார்க்கலாம்.


இந்தக் கதையில் தவறிருந்தால் நான் திருத்திக்கொள்கிறேன். இல்லையேல், கதையின்படி நாம் திருந்திக்கொள்வோம்.

Book your tickets