சேலா! (“pause, and think of that!”) (Written\Composed by Chicago Tamil Church – CTC)
1.இருக்கிறேன் என்ற தேவனே -Words by Ulahanathan Santhanackumar
இருக்கிறேன் என்ற தேவனே – எங்கள்
இதயத்தில் இருக்க வாருமே
அடிமைத் தனம் ஒழிய எம்மை
ஆட்கொள்ளும் தேவ தேவா (தேவனே)
முடிவில்லா இராஜ்ஜியம் எம்மில்
முழுமையாய் வரட்டுமே
1. நெடுந்தூரப் பயணம் – எங்கள்
நித்திய வாழ்வின் பயணம்
மேகமாய் எம்மை சூழ்ந்து
நின்று வழி நடத்தும் தேவனே – இருக்கிறேன்
2. பதுங்கு குழிகள் உண்டு – அதில்
பட்சிக்கும் சிங்கம் உண்டு
மேய்ப்பனாய் எம்மைக் காத்து
நின்று வழி நடத்தும் தேவனே – இருக்கிறேன்
3. அயர்ந்திடும் வேளையிலும் – உயர்
அடைக்கலம் தேடி வருவோம்
பட்டயம் தந்து காத்து
நின்று வழி நடத்தும் தேவனே – இருக்கிறேன்
2. கோனே கோமானே சரணம் சரணம் -Words by Ulahanathan Santhanackumar
கோனே கோமானே சரணம் சரணம்
இந்நாளிலும் சேமத்தை தரணும் தரணும் (2)
ஒருபோதும் மறவாத உம் நினைவு வேண்டும்
அதுபோதும் என் வாழ்வு முழு நிறைவு பெறும் (2) – கோனே கோமானே
1. பாரா முகம் ஏனையா? அய்யா, அய்யய்யா
பாரா முகம் ஏனையா? இந்தப்பாவியைக் கண் பாரைய்யா (2)
ஆராதனை செய்யும் வேளையிலேயேயும் (2)
அங்குமிங்கும் மனது சென்றிடாமல் இருக்க (2) – கோனே கோமானே
2. கண்களால் உம்மைக் கண்டு, அய்யா, அய்யய்யா
கண்களால் உம்மைக் கண்டு, காதால் கேட்டிட விளைந்தேன் ஐயா (2)
நாவினால் புகழ்ந்திடவும், ஞானத்தில் நிறைந்திடவும் (2)
ஓயாமல் உம்மைத்தேடி ஆயாசம் அடையா வண்ணம் (2) – கோனே கோமானே
3. அப்பமும் இரசமும் தந்து, அய்யா, அய்யய்யா
அப்பமும் இரசமும் தந்து, எந்தன் ஆவியை உயிர்ப்பிக்கணும் (2)
எப்பவுமே உம்மை அண்டியே ஜீவிப்பேன் (2)
அப்பனே இயேசு எந்தன் அய்யனே போற்றி போற்றி (2) – கோனே கோமானே
3. வானம் பூமி படைத்தவர் – Words by Huxley Joseph
வானம் பூமி படைத்தவர்
மனிதனின் சாயலை எடுத்திட்டார்
அன்பை உலகில் போதித்தவர்
நமக்காய் சிலுவையில் பாடுபட்டார்
அவரை பின்பற்றினால்
உன் அன்பை வெளிப்படுத்து (2)
1. தினமும் ஏழையை காண்கிறாய்
மனம் இரங்காமல் கடந்து செல்கிறாய்
பிறன் உதவி கேட்டு வந்திட்டாலும்
இல்லை என்று பொய்தானே சொல்கிறாய் – அவரை பின்பற்றினால்
2. பசியில் உன்னிடம் ஒருவன் வந்தால்
உணவை பகிர தயங்குகிறாய்
வேலை செய்யும் சிறிய மனிதரிடம்
நல் வசதியிருந்தும் பேரம் செய்கிறாய் – அவரை பின்பற்றினால்
3. அனைவருக்கும் நீ நல்லது செய்
எதையும் எதிர் பார்க்காமல் செய்
பெருமைக்கும் புகழ்ச்சிக்கும் கொடுக்காதே
நம் தேவனுக்கென்றும் அது பிடிக்காதே – அவரை பின்பற்றினால்
4. எந்தன் உள்ளத்தின் எஜமானாய் வாருமைய்யா -Words by Ulahanathan Santhanackumar
எந்தன் உள்ளத்தின் எஜமானாய் வாருமைய்யா (2) – வந்து
ஆளுகை செய்யும் ஐயா, ஐய்யய்யா – எந்தன்
1. சுயம் என்னில் சாக வேண்டும்
வேண்டும், வேண்டும் வேண்டும்
சுயம் என்னில் சாக வேண்டும்
அதுவன்றோ இடுக்கமான வாசல் (2)
வாசலைக் கண்ட பின்னும்
முன்னேற திராணி இல்லை
வாசலைக் கண்ட பின்னாலும்
முன்னேற திராணியே இல்லை
வந்தென்னை மீட்க வேண்டும், த-யா-பர-னே! (2)
தயாபரா, தயாபரா, தயாபரா – வாரும் – எந்தன் உள்ளத்தின்
2. நீர் என்னில் வெளிப்பட வேண்டும்
வேண்டும், வேண்டும் வேண்டும்
நீர் என்னில் வெளிப்பட வேண்டும்
அதுவன்றோ எந்தன் ஆத்தும இரட்சிப்பு (2)
இரட்சிப்பைக் கண்ட பின்னும்
திரும்ப வி-ழா-த படி
இரட்சிப்பைக் கண்ட பின்னாலும்
திரும்பவும் வி-ழா-த ப-டி
கிருபையால் பெலமூட்டும் கிரு-பா-கர-னே! (2)
கிருபாகரா, கிருபாகரா, கிருபாகரா – வாரும் – எந்தன் உள்ளத்தின்
5. என் தேவனே எந்தன் இராஜனே -Words by Ulahanathan Santhanackumar
என் தேவனே எந்தன் இராஜனே
உம் பாதம் என் சரணாலயம்
கன் மலைபோல் (காப்பவர் நீரே)/ (காப்பவரே)
கர்த்தாவே உம்மைப் பாடுவேன் (2)
1. உம் மந்தையில் நாளும் சேரவே
என்மீது கிருபையாய் இரும்
நீர் தள்ளினால் (மாண்டிடுவேனே) / (மாண்டிடுவேன்)
இராஜாவே என்னைப் பாருமே (2)
2. பரிசுத்தம் நான் பெற்றுக்கொள்ளவே
பாவிஎன் கண்கள் உம்மைதேடிற்றே
புடமிடும் எந்தன் (ஆவிதனையே)/ (ஆவியை)
என்னில் நீர் தெறியும்வரை (2)
3. விரட்டுவார் யாரும் இல்லாமல்
என்கால்கள் எந்நேரமும் ஓடிற்றே
அமைதலான வாழ்வை (நீர் தந்தீரே)/ (தந்தீரே)
ஆதி பிதாவே ஸ்தோத்திரம் (2)
6. பேரின்பமே உம் சமூகம் -Words by Ulahanathan Santhanackumar
பேரின்பமே உம் சமூகம்
தேடிடுவோம் எந்த நாளும்
எண்ணில்லா மாந்தர்க்கு இல்லாத பாக்கியம்
எங்களுக்கீந்தாரே தேவன்
ஸ்தோத்திரம் இயேசு இராஜாவே
ஸ்தோத்திரம் தேவ தேவா (2)
1. திக்கற்ற காட்டினில் சென்றோமே
திடனற்று சோர்ந்து போனோமே
நல்ல துணை தேடும் வேளையில்
நல் வழி ஆனீரே தேவா – பேரின்பமே
2. ஒப்பற்ற அன்பினில் நிலைக்கின்றோம்
ஒவ்வொரு நாளும் நினைக்கின்றோம்
சத்திய வழிதனில் செல்வோர்க்கு
சர்வமும் நீர்தானே தேவா – பேரின்பமே
3. மாசில்லா தேவனை துதிக்கின்றோம்
மானுடத் துன்பம் தொலைக்கின்றோம்
ஒரு குடும்பமாய் எம்மில் ஆனோம்
ஒற்றுமை தந்தீரே தேவா – பேரின்பமே
7. <span”>ஆனந்தம் நிதம் பொழிந்திடும் இதயம்</span”> -Words by NavaJeevan
ஆனந்தம் நிதம் பொழிந்திடும் இதயம்
இயேசுவின் நிமித்தம்
நித்தம் காக்கும் திருவருள் நினைந்து
இருவிழி சொரியும்
என்ன என்ன இந்த மனதினில் ஓரம்
சின்ன குறுநகையோ?
மெல்ல மெல்ல தேவ கிருபையின் ஈரம்
என்னை செதுக்கியதோ!
லல்ல லாலால லாலா லல்லா
லல்ல லாலால லாலா லல்லா
லல்ல லாலால லாலா லல்லா
லல்ல லாலால லாலா லல்லா
லல்ல லாலால லாலா லல்லா
1. எங்கேயோ தொலைந்தேன் விண்மீனாய் அலைந்தேன்
உம்மில் நான் நித்தியத்தை இன்று அறிந்தேன்
இரட்சிப்பை உணர்ந்தேன் புதுவாழ்வை அடைந்தேன்
இயேசுவின் பாதை தனில் கால்கள் பதித்தேன்
உம்சித்தம் போலவே என்னை நீர் நடத்தும்
பரிசுத்தம் அடைந்தேனே அதுவே பேரானந்தம் – ஆனந்தம்
2. தாயாக அணைத்தாய் கண்ணீரைத் துடைத்தாய்
என்பாவம் நீங்க ஜீவ இரத்தம் தெளித்தாய்
உம்மோடு இணைத்தாய் உயிராக நினைத்தாய்
என்ஜீவன் தன்னில் நீரும் உம்மை விதைத்தாய்
அதமாக்கிப் போடாமல் இதமாய் நீர் காத்தீர்
உதவாத என்னோடும் ஆனீரே மாசொந்தம் – ஆனந்தம்
8. பூமியின் குடிகளே வாருங்கள் -Words by Ulahanathan Santhanackumar
பூமியின் குடிகளே வாருங்கள்
இராஜாதி இராஜன் இயேசுவைப் பாடுங்கள்
அவர் நாமம் அதிசயம்
அவர் உன்னதமானவர்
அவர் நேற்றும் இன்றும்
என்றும் மாறிடார் – பூமியின்
1. பழிங்குக் கற்சிலையில் அவரை தேடாதீர்/ தேடாதீர்
பசுமரத் தடியில் அவரை தேடாதீர்/ (நோ நோ)
பரலோக மேன்மை எல்லாம் துறந்தாரே
பாவி, உன் இதய கதவை திறவாயோ? – பூமியின்
2. பொன் பொருள் தூப வர்க்கம் கேளாரே/ கேளாரே
பொல்லாப்பு நீக்கி நம்மை காப்பாரே
பூலோக வாழ்க்கை வாழும் நாள்வரையில்
புதிதான மனதை நம்மில் வைப்பாரே – பூமியின்
3. அன்பரே அவரை ருசித்துப் பாருங்கள்/ பாருங்கள்
அவர் தந்த ஆவிக்கு கீழ்ப்படியுங்கள்
ஆத்தும இரட்சிப்பை நாம் பெற்றிடவே
அவருக்காய் ஒவ்வொரு நாளும் வாழ்ந்திடுவோம் – பூமியின்
9. சாரோனின் ரோஜாவே வாரும்– Words by Ulahanathan Santhanackumar
சாரோனின் ரோஜாவே வாரும்
சற்குண நாதனே வாரும்
மெய்யான தேவனே என் இயேசு ராஜனே
உம்மில் நான் தஞ்சம் கொள்வேன்
உந்தன் நாமம் பெரியது
உந்தன் கிருபை உயர்ந்தது
1. ஆதியும் நீரே/ நீரே, அந்தமும் நீரே/ நீரே
அற்புத ஜோதியும் நீரே
பாவிகள் எம்மை மீட்க இந்த
பாரில் பிறந்திட்டீரே – உந்தன் நாமம்
2. ஒப்பற்ற தெய்வம்/ தெய்வம், உன்னத நேசர்/ நேசர்
எங்களின் இயேசு இராஜா!!
சத்திய வார்த்தை நீரே, உலகில்
சர்வத்தின் சிருஷ்டியும் நீர் – உந்தன் நாமம்