என் ஆத்தும நேசரின் கூடாரத்தில்
Words and Music by Ulahanathan Santhanackumar
என் ஆத்தும நேசரின் கூடாரத்தில்
நான் என்றென்றும் இளைப்பாறுவேன்
நாளும் எனை நீர் தேற்றுகிறீர்
நன்றியால் துதி பாடுவேன்
சரணங்கள்
தோளில் சுமந்து சென்றீரே
தூங்காமல் காத்தீரன்றோ
நெருஞ்சி முட்கள் நிறைந்த்திட்ட பாதை
பஞ்சாக மாறியதே
விலாவில் நீர் பட்ட காயம்
என்னாலே உண்டாயினும்
கல்வாரியின் அன்பினை நானும்
காணும் தயை கொண்டீரே
தேடிய திரவியம் ந்ரே
உம்மை நான் கண்டு கொண்டேன்
உம்மை ஏற்றுக் கண்ட நாளை நான் மறவேன்
அந்நாளை கொண்டாடுவேன்